Sunday, February 17, 2013

Centre For Psycosmic Science



வான்காந்த மனோவியல் விஞ்ஞான பயிற்சி மையம் என்பது மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளில் இருந்து துவங்கிய; விஞ்ஞானத்தை அடிப்படையாக கொண்ட (ஆதாயம் எதிர்பாரா) ஒரு தொண்டு அமைப்பு. தற்போதைய கால கட்டத்தின் மனித இயல் அல்லது மனிதத்தத்துவம் மாற்றி அமைக்கப்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன் உடனடி தேவையின் பொருட்டு தொடங்கப்பட்ட அமைப்பே வான்காந்த மனோவியல் விஞ்ஞான பயிற்சி மையம் ஆகும்.


நம்முள் இருக்கும் இயல்பார்ந்த பேரறிவை கண்டுகொள்ளச் செய்வதும், நாம் எதிர்கொள்ளப்போகும் நூற்றாண்டை பற்றிய சிறந்த தொலை நோக்குடன் கூடிய புதிய சமுதாயத்தை உருவாக்குவதுமே இதன் முக்கிய குறிக்கோள். தனி ஒரு மனிதனுக்கு; இதன் மூலம் இயல்பாக கிடைக்ககூடிய பலன்கள்: முழுமையான நிறைவின் ஆழ்ந்த உணர்வும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் சிறந்த செயல்பாட்டின் உயர்வும் ஆகும்.

சிறிது கடந்தகாலத்திற்குச் சென்று;  தற்போதைய வாழ்க்கை முறையை, உலக நடைமுறைகளை கவனித்து பார்ப்போம். போர், பஞ்சம், இயற்கை சீற்றங்கள், சுற்றுப்புற சூழ்நிலை சீர்கேடுகள், மக்கள்தொகை பெருக்கம்; இவற்றை பற்றியெல்லாம் கூட நாம் சிந்திக்க தேவையில்லை. ஊடகங்களின் மூலம் இதை பற்றி போதுமான அளவு நாம் அறிந்துகொண்டுள்ளோம். 
                       மேலும் இந்த நிலைக்கு தேவையான எந்த ஒரு காரியம் செய்வதற்கும்; நடைமுறை சாத்தியமில்லாத சூழ்நிலையில் இருக்கிறோம். குறைந்தபட்சம் நாம் யாரை கட்டுப்படுத்த முடியுமோ; எவருடைய முழுபொறுப்பு நம் கையில் உள்ளதோ அவரை பற்றி மட்டுமாவது நாம் சிந்திக்க முயற்சி செய்வோம். அது நமது “தனிப்பட்ட சுயம்” : நீ, நான், மற்றும் இந்த மனிதசமுதாயம்.

                                              இந்த நவீன உலகத்தின் தேவைகள்; மனிதனை தனது “இன்றியமையாத சுயத்துடன்”  சிறிதளவு கூட தொடர்பு கொள்ள முடியாத, உணர்ந்துகொள்ள முடியாத ஒர் சீர்குலைந்த நிலைக்கு பதப்படுத்தி வடிவமைத்து விட்டது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள கூட நீ, நான் என்று ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு, காயப்படுத்திக்கொண்டு; எதை நோக்கி ஓடுகிறோம் என்றே கூட தெரியாமல் ஓடும் ஒர் நிலை மட்டுமே நமக்கு மிகவும் பழக்கமாக உள்ளது. மன அழுத்தம், பதற்றம் , அச்சம், சீர்குலைந்த மனித உறவுகள், நிறைவற்ற மன நிலை, மனித மதிப்புகள் அரித்து அழிக்கப்பட்ட ஒரு நிலை; இறுதியாக மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு வாழ்க்கை தரமே உள்ளது.

இது நமது வாழ்வின் முறை அல்ல என்று .நமது உள்ளுணர்வுக்குத் தெரியும். எனினும் இந்த நச்சுவட்டத்தை உடைத்து விடுதலை அடைய நம்மால் இயலவில்லை. நாளைய சமுதாயம், நமது குழந்தைகள் இந்த அரிதான வாழ்க்கையையும், அதன் அனைத்து நிலைகளையும் மதிக்கக் கற்றுகொள்ள வேண்டும். தங்களுக்குள்ளும், சகமனிதர்களுடனும், இயற்கையுடனும் இசைபட வாழக் கற்றுகொள்ள வேண்டும். இந்த நற்பண்பை வலியுறுத்த நாம் தவறினால்; நமது நாகரீகம் அழிவை நோக்கி மிகவேகமாக முன்னேறும் என்பது மட்டும் உறுதி. இந்த அழிவுபாதையை தடுத்து; 
         மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பு இடைக்கால தலைமுறையினரான நமக்கே உரியது. எந்த ஒரு நடவடிக்கையையும் துவங்குவதற்கு முன் முதலில் இந்த அடிச்சுவட்டை மாற்றியமைக்க தேவையானவைகளை பற்றி நமக்கே ஒரு விழிப்புணர்வு அவசியம்.

No comments:

Post a Comment